வௌிநாட்டு மீனவர்கள் மற்றும் கப்பல் ஊழியர்களுடன் தொடர்புகளை பேண வேண்டாம் உள்நாட்டு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாவிடின், எதிர்காலத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் எனவும் அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மைக்காலமாக வடக்கு கடற்பரப்பு ஊடாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பெருமளவான மஞ்சள் கடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.