கருணா அம்மான் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார்- ராஜித்த சேனாரத்ன

322 0

rajithaமுன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, விநாயகமூர்த்தி முரளிதரன் மீதான குற்றச்சாட்டு தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்துக் சொந்தமான வாகனங்கள் பல காணாமல் போயிருந்தன.அவற்றைதேடும் நடவடிக்கையின் போது, பலர் கைதுசெய்யப்பட்டனர்.  முன்னாள் பிரதியமைச்சரருக்கு வழங்கப்பட்ட வாகனத்தை திருப்பிக் கொடுக்காமல் மறைத்து வைத்தார்.அது தொடர்ப்பில் அவரிடம் கேட்டதுக்கு தெரியாது என்று கூறியிருந்தார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த வாகனம் ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

அதனையடுத்தே, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அவரைக் கைது செய்தனர். இது குறித்து கூறுவதற்கு, வேறு ஒன்றும் இல்லை.என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.