குளங்களைப் புனரமைத்துத் தருமாறு ஒதியமலை மக்கள் கோரிக்கை

4842 0

bszdb1ஒட்டுசுட்டான் ஒதியமலைப் பிரதேசத்து மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 4 குளங்களைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருவேப்பமுறிப்பு, செம்பிகுளம், பனையமுறிப்பு, மற்றும் தணிக்கல்லு ஆகிய குளங்களைப் புனரமைத்துத் தருமாறு அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தாம் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற ஒதியமலைப் படுகொலைக்குப் பின்னர் தாம் தமது சொந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்ததாகவும், மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமது கிராமம் காட்டினால் சூழப்பட்டிருப்பதால் தமக்கு இன்னமும் மின்சார வசதி செய்து தரப்படவில்லையெனவும், தாம் காட்டு யானைகள் மற்றும் விஷப் பூச்சிகளால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

1984ஆம் ஆண்டு தமது ஊருக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையால் பேருந்து அனுப்பப்பட்டதாகவும் தற்போது போக்குவரத்து வசதியெதுவும் இல்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தாம் அங்கு விவசாய நடவடிக்கையில் மாத்திரமே ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்த அவர்கள் தமது பகுதியிலிருந்து 1.5 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் சிங்கள மக்களுக்கு மின்சார வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.

அத்துடன் தனிக்கல் கிராமத்தில் மக்கள் குடியேறவில்லையெனவும் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைக்குப் பின்னர் அச்சம் காரணமாக மக்கள் அப்பிரதேசத்தில் குடியேறாது விவசாய நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட்டுவருகின்றனர் எனவும் கவலை தெரிவித்தனர்.

Leave a comment