கிளிநொச்சி மாவட்டத்தில் நடா புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கை

321 0

kalanilaiநடா புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 46 மில்லிமீற்றரில் இருந்து 57 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சியும் அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் எதிர்பார்க்கப்படுகிறது.

சடுதியான கனமழை காரணமாகவும் கடும் சுழல்காற்றுக் காரணமாகவும் நேரக்கூடிய போக்குவரத்து தடை, மின்சார மற்றும் தொலைத்தொடர்பு சேவை தடைகளை மனதிற் கொண்டு பின்வரும் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

38 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கர்ப்பகாலம் உள்ள கர்ப்பவதிகள் மற்றும் பிறந்து ஒருமாதத்திற்கு உட்பட்ட வயதுடைய பச்சிளம் பாலகர்கள் ஆகியோர் அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் தங்கியிருப்பது பாதுகாப்பானது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் யாராவது கர்ப்பவதிகள், பாலூட்டும் தாய்மார் முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் தத்தமது பகுதிகளில் வெள்ள அபாயம் அல்லது போக்குவரத்துத் தடை நேரிடும் என எண்ணினால், அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று தற்காலிகமாக தங்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.