அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சைகளை மேற்கொள்ளும் நோயாளர்களுக்கான மருந்து வகைகளை அவர்களது வீடுகளுக்கே வழங்கும் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய கிளினிக் மருந்துகளை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதுடன், பின்னர் இதனை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.