வடக்கு மாகாண சாரதிகள் கவனயீர்ப்பு போராட்டம்

343 0

வடக்கு மாகாண சாரதிகள், கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) யாழில் முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக  குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சாரதிகள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் புகுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளஅவர்கள், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் ஒன்றையும், கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்த சாரதிகள் கையளித்துள்ளனர்.