மேலுமொரு ஆடைத் தொழிற்சாலையின் ஊழியருக்கும் கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்கள்

204 0

திஹாரிய பகுதியில் அமைந்துள்ள ஹெலா ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நிறுவாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையின் ஏனைய உழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேநேரம், மினுவங்கொடை கொத்தணிப் பரவலுடன் கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியருக்கு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதுடன், ஊழியர்களின் சோதனை முடிவுகள் வெளியானதும் ஆடைத் தொழிற்சாலையை திறப்பது தொடர்பான முடிவுகள் எட்டப்படும் என்றும் நிர்வாகத்தினர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.