மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தனைத் தெரிவித்துள்ளார்.
கேகாலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மூவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 6 தினங்களில் மாத்திரம் 24,878 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதனடிப்படையில் நாளொன்றுக்கு சுமார் 5000 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.