14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயாகம் மேற்கொண்ட 21 வயது இளைஞன்

247 0

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சித்தாண்டி பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயாகம் மேற்கொண்ட 21 வயதுடைய சிறுமியின் காதலனை நேற்று (11) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் வீட்டில் சிறுமி தனிமையில் இருந்தபோது அவரது மாவடிவேம்பு பிரதேசத்தைச் சோந்த 21 வயது காதல் கடந்த 8 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக சிறுமியின் உறவினர்கள் நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த 21 வயது இளைஞனை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்பட்டுள்ளதுடன், இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.