யாழ்ப்பாணம் தீவகப்பகுதிக்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விஜயம் (காணொளி)

352 0

vijakalaயாழ்ப்பாணம் தீவகப்பகுதி அடிப்படை வசதிகள் இன்றி தற்போதும் காணப்படுவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்றையதினம் தீவகப்பகுதியாகிய அனலைதீவு, எழுவதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவுகளுக்கு சென்று பாடசாலை, வைத்தியசாலை ஆகியவற்றின் தேவைகளைக் கண்டறிந்த பின் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தீவக வலயம் கல்வி முன்னேற்றத்தில் நாட்டிலுள்ள வலயங்களில் இறுதி வலயமாகிய 97வது வலயமாக காணப்படுகின்றத என்றும் இந்நிலையை இவ்வாறு தொடர விடாமல் நல்லாட்சி அரசாங்கத்தில் தீவக வலயத்தை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கேற்ப பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறைகள், தளபாடப் பற்றாக்குறைகள் மற்றும் போக்குவரத்துப் பற்றாக்குறைகளை நீக்கி மாணவர்கள் கற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கு முயற்சி எடுப்பதாகவும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு ஆசிரியர்களுக்கு விடுதி வசதிகள் மற்றும் கூடுதலான கஸ்ர பிரதேச கொடுப்பனவுகள் ஆகியவற்றை வழங்கிய பின்னர் ஆசிரியர்களை அதிகாரிகளை கடமைக்கு திரும்புவதற்கு கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.