திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர் தாயக பிரதேசத்தை புவியியல் ரீதியாக பிரித்து நிற்கும் மையப்புள்ளியான தமிழ் மக்களின் பழமை வாய்ந்த கிராமமான தென்னைமரவடி கிராமத்தில் 358 ஏக்கர் நிலத்தை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் இருக்கின்ற பௌத்த பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் திணைக்களம் சுவீகரித்து எல்லை கற்களை நாட்டியுள்ளதாக தென்னமரவடி மக்கள் தெரிவித்துள்ளனர் .
கடந்த மாதம் 24 ஆம் திகதி பனிக்கவயல் தொடக்கம் தென்னமரவடி வரையான 358 ஏக்கர் காணிகளை அபகரித்து தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களையும் உள்ளடக்கி தொல்லியல் திணைக்களதால் எல்லை கற்கள் இடப்பட்டு வருவதை அறிந்து அப்பகுதிக்கு சென்ற தென்னமரவடி மக்கள் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பிய ; நிலையில் அரிசிமலை பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் பிரதேசமாக அடையாள படுத்தபட்டு எல்லை கற்கள் இடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்
செய்கை பண்ணுவதற்காக தயார் படுத்த பட்ட வயல்களுக்கு நடுவே கூட எல்லை கற்கள் நடப்பட்டுள்ளது. இவ்வாறு அபகரிக்க பட்ட 358 ஏக்கர் பரப்பில் தென்னமரவடி கிராமத்தின் ஆரம்பத்தில் பௌத்த விகாரை ஒன்றுக்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்கும் ஆரம்பிக்கபட்டு சிவில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புக்கு நிறுத்த பட்டுள்ளனர்.
இவ்வாறு பாரிய அளவிலான நிலம் கையக படுத்த பட்டுள்ளமையின் பின்னணியில் சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான திட்டமாக இருக்கலாம் என கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.