கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் கடும் குளிருடனாக காலநிலை தொடர்கின்றது. அதேவேளை தொடர் மழையும், காற்றும் வீசி வருகின்றது,
கடும் குளிர் காரணமாக மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பூநகரி பிரதேசத்தில் நேற்று மாலை மீன்பிடிக்கு சென்ற மீனவர்கள் மூவர் காணாமல் போன நிலையில், இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
மீன்பிடிக்கு செல்ல வேண்டாம் என எச்ரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், மீறி மீன்பிடிக்கு சென்வர்களே இவ்வாறு காணாமல் போனதாக கிளிநொசசி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரி சூரியராஜா தெரிவிக்கின்றார்.
கடும் மழை காரணமாக ஊற்றுபுலம்பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலத்தின் அபிவிருத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக பாதையும் அரிப்புக்குள்ளாகி உள்ளது, இதன் காரணமாக வள்ளுவர் பண்ணையை சேர்ந்த 90 குடும்பங்களை சேர்ந்த 500 மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ள நிலையில், மக்களின் போக்குவரத்து பாதிக்கப்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலைய அதிகாரி குறிப்பிடுகின்றார்.
இதுவரை எந்தவொரு இடைதங்கல் முகாம்களும் உருவாகவில்லை என்பதுடன், தொடரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களிற்கு உதவுவதற்கு இடர் முகாமைத்துவ நிலையம் தயாராக உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது