நோயாளிகளை பார்வையிடுவதற்கு மருத்துவமனைகளுக்கு செல்வதை குறைத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சிறிதரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பொதுமக்களை சுகாதாரவிதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவமனைக்கு செல்லும்போது ஒருமீற்றர் இடைவெளியை பேணுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ள அவர் முகக்கவசங்களை அணியுமாறும் கைகளை கழுவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்கசெல்பவர்கள் பொருட்கள் மருந்துகளை நோயாளிகளிடம் நேரடியாக வழங்கவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகளுக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கே செல்லுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.