தம்பத்தேகம பகுதியில் புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்து (காணொளி)

323 0

trainஅனுராதபுரம் தம்பத்தேகம பகுதியிலிருந்த யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தம்புத்தேகம பகுதியில் தண்டவாளம் மாறுகின்ற நிலையில் இன்று மதியம் யாழ்ப்பாணத்தை நோக்கி வந்த புகையிரதம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தம்பத்தேகமயில் தொடரூந்து தடம்புரண்ட காரணத்தால் யாழ்ப்பாணத்திற்கான குளிரூட்டி புகையிரதம் கொழும்பிற்கான பயணத்தை மேற்கொள்ள முடியாமல் அனுராதபுரத்தில் தரித்து நிற்பதாக யாழ்ப்பாணப் புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு இரவு 7 மணிக்குப் புறப்படும் புகையிரதம் சேவையில் ஈடுபடுத்த முடியாமல் இருப்பதாக யாழ்ப்பாணப் புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.