பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதியில் 28 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மேலும் பலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இந்த நியைலில், கடந்த திங்கட்கிழமை முதல் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, மினுவாங்கொட, ஜா-எல, கந்தான மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவு, கிரிந்திவெவல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வத்துஹிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல, யக்கல, சீதுவ மற்றும் கந்தான ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
குறித்த பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடரும் என பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.