எதிர்க்கட்சித் தலைவருக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகருக்கும் இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரோபினாவின் மார்கசுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற குறித்த சந்திப்பு 1 மணித்தியாலங்கள் வரை நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது, சமகால அரசியல் மாற்றங்கள், புதிய அரசியலமைப்பு தயாரித்தல், நல்லிணக்கத்தை எட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டனர்.