கடந்த இருபத்துநான்கு மணி நேர காலப்பகுதிக்குள் நாட்டின் இரு இடங்களில் சாலை விபத்துக்கள் பதிவாகி உள்ளது
தம்புள்ளை குருநாகல் வீதியில் நடந்த வாகன விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர் அனுராதபுரத்தில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை தியத்தால்ஆவை பகுதியில் பாடசாளை பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவிகள் ஆறு பேர் காயாமடைந்துள்ளனர் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பெரிதாக பாதிப்புகள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது