வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

342 0

தென்மேற்கு பிராந்தியத்தில் பலத்த காற்று மற்றும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் அதிகரிக்க கூடுமென என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிள் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படுவதோடு, அதனால் ஏற்படும் அனர்தங்களில் இருந்து பாதுகாப்பாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது