தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார் .
அதேபோல், கொழும்பு டி ஆர் விஜயவர்த்தன மாவத்தை மத்திய தபால் பரிமாறல் வாடிக்கையாளர் சேவையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்படுகிறது.
மத்திய தபால் பரிமாறல் ஊடாக வர்த்தக தபால் சேவையை பெற்றுக் கொள்ளும் நிறுவனங்கள் தபால் பொதிகளில் சேர்ப்பதற்கு உதவி அத்தியட்சகரை தொடர்பு கொண்டு பொருத்தமான நேரத்தை ஒதுக்கி அந்தப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வெகுஜன ஊடக துறை அமைச்சரினதும் அமைச்சின் செயலாளரினதும் உடன்பாட்டின் அடிப்படையில் பெறப்பட்ட தீர்மானம் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இது தொடர்பில் வாடிக்கையாளர்களான பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் தபால் திணைக்களம் கவலையைத் தெரிவித்துக் கொள்வதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.