அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல் விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
நேரடியாக நடைபெறவிருந்த அதிபர் தேர்தல் விவாதம், இனி இணையம் வழி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் அவ்வாறு கூறினார்.
Fox Business News செய்தி நிறுவனத்திடம் அவர் பேசினார்.
அதிபர் டிரம்ப் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைவரின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு அந்த மாற்றம் செய்யப்பட்டதாக அதிபர் தேர்தல் வேட்பாளர் விவாதங்களுக்கான ஆணையம் முன்னதாகத் தெரிவித்தது.
ஆனால் தமக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடும் திரு. ஜோ பைடனை (Joe Biden) பாதுகாக்க ஆணையம் முனைவதாகத் திரு. டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
திரு. டிரம்ப்புக்குக் கிருமித்தொற்று இருப்பதாகக் கடந்த வாரம் உறுதிசெய்யப்பட்டது.