பாகிஸ்தான் முகம்கொடுத்துவரும் உள்ளக சிக்கல்களை தீர்ப்பதற்கு தாம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்டு ட்ரம்ப் அவர்களை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் தொலைபேசியின் ஊடாக வாழ்த்து தெரிவித்த போதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்திருந்தார்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஆசிய அரசியலின் மாபெரும் சக்தி என்றும் அமெரிக்க பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மென்மேலும் பலப்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.