பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது
மாலபை பகுதியை சேர்ந்த மூன்று பேரினால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட மனு ஒன்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மாலபை பகுதியில் இரண்டு ஏக்கர் நிலத்தை முறையான அனுமதி இன்றி ராணுவ அதிகாரிகளின் வீடுகள் கட்டப்படுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையினால் பிரதேச வாசிகளின் சராசரி வாழ்க்கைக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்று குறித்த மனுவில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது