வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

328 0

vavuniyaவவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும், ஊர்வலமும் இன்று இடம்பெற்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி பவானி பசுபதிராஜா தலைமை தாங்கினார்.

இதன்போது எயிட்ஸ் நோய் பரவுவதன் முறைகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டதுடன், வவுனியா நகர்ப்பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தாய்சேய் நலன் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ஜெயதரன், பாலியல் நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி கே.சந்திரகுமார், பாலியல் நோய் சிகிச்சை நிலைய பொது சுகாதார பரிசோதகர் து.சிவானந்தன் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், சாரதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.