அநுராதபுரத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறாது

285 0

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காணப்படுவதால் அநுராதபுரத்தில் நடத்தப்படவிருந்த புத்தக கண்காட்சி நடைபெறாது என அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

கொவிட் வைரஸ் பரவல் காலத்தில் இவ்வாறதொரு கண்காட்சிக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாக அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்திருந்த அவர்,  இந்த கண்காட்சிக்கு அனுமதி வழங்கிய ​தருணத்தில் கொரோன வைரஸ் பரவல் உக்கிரமடைந்து காணப்படவில்லை என்றார்.