கிளிநொச்சியில் “நாடா” புயலால் கல்லூரியின் தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக பாறி வீழ்ந்தது. (காணொளி)

357 0

kili-schoolநாட்டின் வட பகுதியில் “நாடா” புயல்காற்று நிலைகொண்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இன்று காலை கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் காலை எட்டு முப்பது மணியளவில்  கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக பாறி வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்றவேளை பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதிலும், எவருக்கும் பாதிப்புக்களும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தரம் ஆறு தொடக்கம் உயர்தரப் பிரிவில் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக்  கொண்டு இயங்கி வருகின்ற இப்பாடசாலையில், கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேச மாணவர்கள் அதிகமாகக் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.