புகையிரத்தில் மோதி ஒருவர் பலி

258 0

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி வந்த புகையிரதத்தில் மோதி இன்று காலை நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார், சௌத்பார் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

நேற்று (7) இரவு கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி வருகை தந்த புகையிரத்தில் மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் குறித்த நபர் இன்று வியாழக்கிழமை காலை 4 மணியளவில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிய வருகின்றது.சடலம் அடையாளம் காணப்படவில்லை.

சடலம் மீட்கப்பட்டு தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்கொலை? செய்து கொண்டாரா என்பது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.