மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் உணவகமொன்றை நடத்திவந்த 55 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது மகன் ப்ரெண்டிக்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றி கொரோனா தொற்றுக்குள்ளானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
இவரின் சிறிய தாயாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பல மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆகையால், எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.