நிமோனியா காய்ச்சலால் யாழில் ஒருவர் உயிரிழப்பு

267 0

நிமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட காரைநகர், பலக்காடு பகுதியைச் சேர்ந்த சபாரத்தினம் வரதராஜா (வயது 53) என்ற குடும்பஸ்தர்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (06) மாலை உயிரிழந்துள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி குடும்பஸ்தர், இம்மாதம் 5ஆம் திகதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், உறவினர்கள் மூலம் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை, உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.