மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக 1,488 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக, போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போதைப்பொருள் தடுப்புச் செயலணியின் மாவட்ட மட்டக் கூட்டம், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று (06) நடைபெற்றது.
அங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், “இவ்வாண்டு ஜனவரி முதல் இன்று வரையும் ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக 190 பேரும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 28 பேரும் கஞ்சா வைத்திருந்த 245 பேரும் கோடா வைத்திருந்த குற்றத்துக்காக 155 பேரும் கசிப்பு உற்பத்தியிலும் விற்பனையிலும் ஈடுபட்ட 870 பேரும் என மொத்தம் 1,488 பேருக்கு எதிராக, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.