வெலிசறை பிரன்டிக்ஸ் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும் கொரோனா!

251 0

கம்பஹா மாவட்ட  வெலிசறை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளை அடுத்து அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெலிசறை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை பணிபுரிந்த ஊழியர் 93 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையை அடுத்தே கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.