முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகள் பெரிதும் பாதிப்பு(படங்கள்)

318 0

 

dsc_0369முல்லைத்தீவில் ‘நாடா’ புயலின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள “நாடா” எனும் புயலின் தாக்கத்தினால், வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும்  நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் இருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று இரவு நிலைகொண்டிருந்த நாடா புயல் முல்லைத்தீவு மற்றும் யாழ்குடா ஊடாக வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய அலகினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு பகுதியில் கடும் காற்று வீசிவருவதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அத்துடன் புயல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று பலமாக வீசுவதோடு பாரிய அலைகள் எழ கடல் கொந்தளிப்பாக காணப்படுவதானாலும், தொடர்ச்சியாக மழைபெய்துவருவதாலும், மீன்பிடியை ஜீவனோபாயமாக கொண்ட முல்லைத்தீவை சேர்ந்த கடற் தொழிலாளர்கள் எவரும் கடலுக்கு செல்லமுடியாத நிலை காணப்படுவதுடன், தொழிலை மேற்கொள்ளும் வள்ளங்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் கரையிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dsc_0344 dsc_0348 dsc_0354 dsc_0363-1 dsc_0371 dsc_0375 dsc_0377