மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அதிகளவான மீனவர்கள் இன்று கடற்தொழிலுக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் பெரிய பாலத்தடியில் இருந்து ஆத்துவாய் பகுதியூடாக கடலுக்குச்செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்படையினர் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.
மன்னாரில் இருந்து காங்கேசன் துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புக்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் மன்னார் கடற்கரை பகுதியில் வழமைக்கு மாறாக காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருவதுடன் மீனவர்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.