வாட்ஸ் அப்பில் மலேசிய பிரதமரை அவமதித்த முதியவர் கைது

4300 15

201607041012327218_76-years-old-man-held-for-insulting-PM-Najib-Razak-on_SECVPFவாட்ஸ் அப்பில் மலேசிய பிரதமரை அவமதித்த குற்றத்திற்காக 76 வயது முதியவரை காவல்துறை கைது செய்துள்ளது.மலேசிய பிரதமராக நஜிப் ரஷாக் பதவி வகிக்கிறார். சமீபத்தில் அவரது கொடூர தோற்றத்துடன் கூடிய போட்டோ வாட்ஸ்அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதவி செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் 76 வயது முதியவர் ஒருவர் வாட்ஸ் அப்பில் இப்படத்தை வெளியிட்டது தெரியவந்தது.

எனவே, அவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயரை பாயா என குறிப்பிட்டுள்ளார். இவர் காம்பங்துங்கு பகுதியில் பெடாலிங் ஜயா என்ற இடத்தை சேர்ந்தவர். இவர் மீதான தண்டனை நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டுக்கும் மேற்பட்ட ஜெயில் தண்டனையும், 50 ஆயிரம் மலேசிய ரிங்கிட் பணம் (ரூ.8 லட்சத்து 40 ஆயிரம்) அபராதமும் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்க வாய்ப்பு உள்ளது.

Leave a comment