யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் 5 பேர் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர். தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை கரணமாக கரை ஒதுங்கியவர்கள் என பருத்தித்துறை பிரதேச செயலர் மற்றும் இந்தியத்துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையிடம் கையளிக்கப்பட்டவர்கள் காலநிலை சீராகியதும் கடற்படையினரால் கடலினூடாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என பருத்தித்துறை பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் தெரிவித்தார்.
மேலும் பருத்தி;துறை சுப்பர்மடத்திலிருந்து தொழிலுக்கு சென்ற 2 மீனவர்கள் இதுவரை கரை ஒதுங்கவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பருத்தித்துறை பிரதேச செயலர் தெரிவித்தார்.