தலைவர் பிரபாகரனின் இளையமகன் சிறுவர் படையணியின் தளபதி என்கிறார் பொன்சேகா

301 0

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளையமகனை சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லவில்லை என சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா பிரபாகரன் மகன் சிறுவர் படையணியின் தளபதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினர் பிஸ்கட் வழங்கிய பின்னர் பிரபாரகனின் மகனை கொன்றனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குற்றம்சாட்டியவேளை அதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனின் மனைவி விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா அவரது மூத்த மகன் விடுதலைப்புலிகள் இயக்க கேணல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவரின் இளைய மகன் சிறுவர்கள் படையணியின் தளபதி எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பிழையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.