கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று பரபரப்பாகக் கூடுகின்றது

289 0

கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பில் ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.

இதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது . இதன் போது புதிய ஊடகப்பேச்சாளர் நியமனம் மற்றும் புதிய கொரடா நியமனம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இப்போது கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக உள்ள சுமந்திரன் தேர்தல் காலத்தில் நடந்துகொண்ட விதம் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதுடன் இம்முறை தமக்கு ஊடகப்பேச்சாளர் பதவி மற்றும் கொரடா பதவி நிலைகளை வழங்கவேண்டும் எனக் கூட்டமைப்பின் பங்களிக் கட்சிகளான தமிழீழ விடுதலைக்கழகம் ( புளொட் ) தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ ) ஆகிய கட்சிகள் கூட்டாக வலியுத்தி வந்தநிலையில் இந்த கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இதற்கு முன்னர் இடம்பெறவிருந்த கூட்டம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கலந்துகொள்ளாமையால் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.