மேல்மாகாணத்தை முடக்கப்போவதில்லை – ஜனாதிபதியின் பேச்சாளர்

237 0

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தை முடக்கப்போவதில்லை என ஜனாதிபதியின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாடளாவியரீதியில் முடக்கல்நிலையை அறிவிக்கப்போவதில்லை என இராணுவதளபதியும் தெரிவித்துள்ளார்.