யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வாய்க்கால்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலோலி, சாவகச்சேரி, அம்பன், வேலணை, கீரிமலை, தொல்புரம், உரும்பிராய், நல்லூர், சண்டிலிப்பாய் கமநல சேவை நிலையங்கள் ஊடாக குறித்த புனரமைப்பு பணிகள் இடம்பெறுகின்றன. இதற்காக 23 மில்லியன் ரூபாய் சிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தப்பணிகளை பூர்த்திச்செய்யதிட்டமிடப்பட்டுள்ளது எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.