யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

262 0

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநீக்கும் நடவடிக்கை   இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பொலிஸார் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர வர்த்தக நிலையங்களிற்கு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் பணி முன்னெடுக்கப்பட்டது

கொரோணா இரண்டாம்  அலை ஆரம்பமாகியுள்ள நிலையில் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இருவரில் ஒருவருக்கு மினுவாங்கொடை பகுதியில் இருந்து வந்தவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற  PCR பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநீக்கும் நடவடிக்கை  இன்றைய தினம் இடம்பெற்றது.

சுகாதார தரப்பினருடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் மாநகர சபையினர் இணைந்து இந்த கிருமி நீக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.