சாவகச்சேரியில் மரம் ஒன்று முறிந்து இளைஞன் பலி

303 0

chvaga3சாவகச்சேரியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இளைஞன் ஒருவன் அதே இடத்தில் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த 27 வயதுடைய சஜித்தானந்தன் கஜந்தன் என்ற இளைஞனே இவ்வாறு மரம் வீழ்ந்து உயிரிழந்தவராவார்.

சப்பச்சி வீதியால் சென்றுகொண்டிருந்த போது பலத்த காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து உந்துருளியில் சென்ற இளைஞன் மீது வீழ்ந்துள்ளது.தனது விவாகரத்து வழக்கிற்காக சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 8.45 மணியளவில் நடைபெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.தற்போது இறந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திலேயே காணப்படுகிறது.

chavaka1 chavaka2