தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துடன் கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் 7-ந்தேதி (நாளை) முதல்- அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அறிவித்திருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்திய ஓ. பன்னீர்செல்வம், ‘தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்’ என்று டுவிட்டரில் நேற்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.