மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ் பகுதியில் உள்ள களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டுகழக மைதானதுக்கு அருகாமையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் கணாப்படாத நிலையில்,மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.