ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது!

242 0

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டல் 52 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள வெயாங்கொடை, திவுலப்பிட்டி, மினுவங்கொடை முதலான பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா- திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கடந்த 4ஆம் திகதி கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பை பேணிய பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கொரோனா ரைவஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.