சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 513ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுடன் தொடர்பை பேணிய மேலும் 111 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தொற்றில் இருந்து 3 ஆயிரத்து 259 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 241 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 56 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.