வைத்தியாசாலையிலிருந்து வெளியேறி தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றிய டிரம்ப்- மருத்துவ நிபுணர்கள் கடும் கண்டனம்

276 0

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் கிசிச்சைக்காகமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை திடீரென மருத்துவமனையிலிருந்து வெளியேறி காரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பயணம் செய்தசம்பவம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நான் வோல்டர் ரீட் மருத்துவமனையிலிருந்து வெளியேறி வெளியேயுள்ள எனது தேசப்பற்றாளர்களை சந்திக்கப்போகின்றேன் என டுவிட்டரில் பதிவு செய்த பின்னர் டிரம்ப் கார் ஒன்றினுள் தோன்றியுள்ளார்.


குறிப்பிட்ட காரினுள் பாதுகாப்பு கவசங்களுடன் முன்னாள் இருவரும் பின்னால் டிரம்பும் காணப்பட்டுள்ளனர்.
காரிலிருந்தவாறு முகக்கவசம்அணிந்த டிரம்ப் தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

டிரம்பின்இந்த நடவடிக்கை வைரசிற்காக சிகிச்சைபெறும் போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகளை டிரம்ப் மீறியுள்ளார் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் இதன் காரணமாக காரிற்குள் காணப்பட்ட விசேட பாதுகாப்பு பிரிவினருக்கு டிரம்ப் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவித்;துள்ளனர்.

ஜனாதிபதி பயணம் செய்த வாகனம் குண்டுதுளைக்காதது மாத்திரமல்ல இரசாயன தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்ககூடிய வகையில் உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ள குறிப்பிட்டமருத்துவமனையின் வைத்தியர் ஜேம்ஸ் பிலிப்ஸ் அந்த வாகனத்துக்குள் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார்.
அந்த காரிற்குள் காணப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்தவேண்டும் என அவர்தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஜனாதிபதி தனது ஆதரவை வெளிப்படுத்த முயன்றாரா என கள்வி எழுப்பியுள்ள விமர்சகர்கள் இது கேள்விக்குரிய நடவடிக்கை என தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் கொரோனா வைரசினை சாதாரணமாக எடுத்துள்ளரா எனவும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜனநாயக கட்சியினரும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.எங்களுக்கு தலைமைத்துவமே அவசியம் படங்கள் அல்ல என சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.