யாழில் பலத்த காற்றுடன் கூடிய மழை (படங்கள் இணைப்பு)

346 0

img_4894வடக்கில் ஏற்பட்டுள்ள காலை நிலை மாற்றத்தினால் யாழில் பலத்த காற்று வீசி வருகின்ற அதே வேளை தொடர்ச்சியான அடை மழையும் பெய்து வருகின்றது.
தொடர்ச்சியான மழை காரணமாக அதிகளவாக குளிரும் யாழ்ப்பாணத்தில் நிலவி வருகின்றது.
திருகோணமலையில் இருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலை கொண்டுள்ளது. இத்தாழமுக்கமானது யாழ்ப்பாணத்தின் வடமேற்காக நகர்ந்து வருகின்றது.
இத் தாழமுக்கமானது சூறாவளியாக மாறும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை செய்திருந்தது. அத்துடன் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்திருந்தது.
இதன்படி இன்று யாழ்ப்பாணத்தில் பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. பலத்த காற்று காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

img_4867

img_4875

img_4912

img_4853