திட்டமிட்டபடி அதே தினத்தில் பரீட்சைகள் நடை பெறும்!

306 0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட் சை திட்டமிட்டபடி அதே தினத்தில் நடை பெறும், இதே வேளை உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானிக் கவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொ ற்று மீண்டும் பரவியமை காரணமாக மாணவர் களின் பாது காப்பிற்காகப் பரீட்சையை ஒத்திவைக் குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்ததாக அமைச் சர் ஜி.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப் பில் தெரிவித்தார்.

பரீட்சையை நேர அட்டவணைப்படி நடத்தினால் மாண வர்களுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப் படும் என அவர் தெரிவித்தார்.

 

அடுத்த இரண்டு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப் படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர் வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை , கல் விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர் வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதியிலிருந்து நவம்பர் 06 ஆம் திகதி வரை நடத்து வதற்கு முன்னதாக தீர் மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.