மங்களவின் குற்றச்சாட்டை மறுத்தார் கோட்டா

289 0

gottapa34565வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்தை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

அமெரிக்காவில் தூதரக பிரதிநிதி இல்லாத லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் வீடு ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், அதில் கோத்தபாய ராஜபக்சவின் மகன் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனவும் நேற்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஒரு வருடமும் 9 மாதங்களும் அந்த வீட்டுக்கான நிதி செலுத்தி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்ட கோத்தபாய மறுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

தனது மகன் அரசாங்க பணத்தில் அமெரிக்காவில் வீடொன்றை கொள்வனவு செய்து வாழ்வதாக வெளிவிவகார அமைச்சரவினால் வெளியிடப்பட்ட அடிப்படைற்ற கருத்துக்களுக்கு எனது கண்டனத்தை வெளியிடுகின்றேன்.

இது தனது மதிப்பை இழக்க செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு முயற்சியாகும் என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.