சிறைச்சாலை கைதிகளை பார்வையிட தடை

300 0

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உடன் அமுலக்கு வரும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

குறித்த 69 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேவையாற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் இன்றும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 400 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.