யாழ்ப்பாணம்- நாவலர் வீதியில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணொருவரை தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் தாயார், திவுலப்பிடியவில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பெண் பணி புரிந்த ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே குறித்த பணியாளரின் தாய் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இவரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் குறித்த பெண், நேற்றே தனது நண்பருடன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
இந்நிலையிலேயே அவரையும் கோட்டை பகுதியில் பணிபுரியும் அவரது நண்பரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.